தமிழின அழிப்பிற்கு நீதிகோரி பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாடில் பிரின்சில் இருந்து ஜெனிவா நோக்கி கடந்த 28.08.2019 புறப்பட்ட நடைபயணம் இன்று 17 ஆவது நாளாக ஜெனீவாவிலிருந்து 90 கிலோமிற்றரில் உள்ள Poligny நகரினை நோக்கிச் இன்று காலை 8.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு புறப்பட்டுள்ளது.
நேற்றும் இனிவரும் வீதிகள் யாவும் அல்ப்ஸ் மலைத்தொடர்கள் கொண்டமையால் வாகனங்கள் செல்வது போல் குகைகள் மூலம் செல்ல முடியாது மலைகளை ஏறியும் இறக்கங்களில் வேகமாக இறங்கியும் செல்லும் பாதைகளாகும். இதனால் வேகமாக உயர்ந்த மலைப்பாதை ஏறும் கால்களில் கூடிய பலத்தை பிரயோகிக்கும் போது இதயமும் பலமாக தொழில்படுவதுடன் கால்களில் பாதங்களில் கொப்பளங்களும் ஏற்படும். இந்த மூன்று நாட்களும் நடைபயணப் போராளிகள் அதன் பாதிப்பிற்கு உள்ளாகினர்.
ஆனாலும் உறுதி கொஞ்சம் கூட குறையாது பயணத்தைத் தொடர்கின்றார்கள். இன்றைய தினம் இவர்களுடன் நடைபயணத்தில் சுவிசு நாட்டிலிருந்து இருவர் வந்து இணைந்து கொண்டு நீதிக்கான நடைபயணம் சென்று கொண்டிருக்கின்றது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு -ஊடகப்பிரிவு )