புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைக்குப் பின்னரும் அதற்கு முன்னரும் புங்குடுதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற வழமைக்கு மாறான சம்பவங்கள் தொடர்பான தகவல் அறிக்கை சமர்ப்பிக்குமுhறு அப்பகுதி கிராம சேவையாளருக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முழுமையான தகவல்கள் அடங்கிய இவ்வறிக்கையினை 13 தினங்களுக்குள் மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கிராம சேவையாளருக்க நீதவான் கால அவகாசம் வழங்கியுள்ளார்.
வித்தியா கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கினை விசாரணைக்க எடுத்துக் கொண்ட போதே நீதவான் மேற்படி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இவ்வழக்கின் குறிப்பிடப்பட்டுள்ள கொலைச் சம்பவத்தில் உயிரிளந்த வித்தியா வசித்து வந்த பகுதியின் கிராம சேவையாளருக்கு நீதிமன்று பின்வருமாறு பணிப்புரை விடுக்கின்றது.
வித்தியா கொலை செய்யப்படுவதற்கு முன்னர் குறித்த பகுதியில் வசித்து வந்த குடும்பங்களின் தகவல்கள் மற்றும் வித்தியா கொலை செய்யப்பட்ட பின்னர் தற்போது அங்கு வசித்து வரும் குடும்பங்களின் தகவல்கள்.
வித்தியாவின் கொலை நடைபெறுவதற்கு முன்னர் புங்குடுதீவில் வசித்து வந்தவர்கள் வித்தியா கொலை செய்யப்பட்ட பின்னர் உடனடியாக தனிநபர்களாகளோ அல்லது குடும்பமாகவோ அப்பகுதியினை விட்டு வெளியேறியுள்ளார்களா? அவ்வாறு வெளியேறியிருப்பின் அது தொடர்பாக தகவல்கள்.
இவை அனைத்தும் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் உறுதிப்படுத்தும் அத்தாட்சிப் பத்திரங்களுடன் எதிர்வரும் வழக்குத் தவணைக்கு முன்னர் மன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் நீதவான் மேலும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் இவ்வழக்கினை எதிர்வரும் யூலை மாதம் 13 ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைக்குமாறும் நீதவான் பணித்திருந்தார்.
- Home
- முக்கிய செய்திகள்
- வித்தியா கொலை சம்பவத்தின் பின்னர் புங்குடதீவில் நடந்தவை என்ன…?
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அன்னை பூபதி நாட்டுப்பற்றாளர் தினம் 3.5.2025 போகும், யேர்மனி
April 27, 2025 -
வீரவணக்க நிகழ்வு 31.5.2025
April 27, 2025