தற்போதைய அரசாங்கம் செய்தவை இதுவரையில் எந்தவொரு அரசாங்கமும் செய்யாதவை-அர்ஜுன

222 0

அரசியல் கட்சிகளின் ஆளுகைக்குள் உட்படாமல் எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா, தாதுகம பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டை நேசிக்கும் நாட்டை வெற்றி பெறச் செய்யும் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இனவாதத்திற்கு ஊக்கமளிக்கும் ஒருவர் நாட்டுக்கு தேவையில்லை எனவும், இந்த முறை அரசியல் ரீதியாக வேட்பாளர்களை அறிந்துக்கொள்வதில் பயனில்லை எனவும் அவர் கூறினார்.

கடந்த தேர்தலின் மூலம் உருவான அரசாங்கத்தின் ஊடாக பல பிரச்சினைகளைத் தீர்க்க இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டதாகவும், எனவே, தற்போதைய அரசாங்கத்தின் மூலம் செய்தவற்றை போன்று இதுவரையில் எந்தவொரு அரசாங்கமும் செய்ததில்லை எனவும் அவர் கூறினார்.

விளம்பரம் இல்லாமல் முன்னெடுக்கப்படும் வேலைகளில் பல குறைப்பாடுகள் உள்ளதை ஏற்றுக்கொள்வதாக கூறிய அமைச்சர், தற்போதைய அரசாங்கமே கிராமத்திற்கு சென்று பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஆனால், அரசாங்கம் பலவீனமாக உள்ளது என ஊடகங்கள் காண்பிப்பதாகவும் அதற்கு யாரையும் குறை கூற முடியாது எனவும் அவர் கூறினார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள பிரச்சினைகள் யாவும் விரைவில் தீர்க்கப்படும் என்வும் பொறுத்தமான நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் நியமிக்கப்படுவார் எனவும் அவர் கூறினார்.

எந்தவொரு கட்சியிலும் முரண்பாடுகள் உள்ளதாகவும், பொறுத்தமான வேட்பாளரை நியமித்தால் கடந்த முறையை விட வெற்றி வாய்ப்பு அதிகம் எனவும் தெரிவித்தார்.