எங்கு நிலை கொண்டு மோhட்டார் சைக்கிலில் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்தினார்கள் இன்று புதன்கிழமை என்பது கண்டறியப்பட்டள்ளது.
கண்டறியப்பட்ட இடத்தில் நடாத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் அங்கிருந்து துப்பாக்கி தோட்டாவின் வெற்றுக் கோது ஒன்றும் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி கொக்குவில் – குளப்பிட்டிப் பகுதியால் சென்று கொண்டிருந்த யாழ்.பல்கலைக்கழ இரு மாணவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்தியிருந்தனர்.
இச் சம்பவத்தில் இரு மாணவர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் விசேட குற்றப் புலனாய்வு பிரிவினர், துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்ற சந்தேகத்தில் 5 பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரனின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் உள்ள அவர்களை இன்று காலை பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்திற்கு அழைத்து வந்த குற்றப் புலனாய்வு பிரிவினர் மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்ட இடத்தினை இனங்காட்டுமாறு கேட்டிருந்தனர்.
இதன்படி கொக்குவில் பகுதியில் உள்ள சந்தைக் கட்டத் தொகுதிக்கு முன்பாக தாங்கள் நிலை கொண்டிருந்ததாகவும், கே.கே.எஸ் வீதியோரமாக நின்று கொண்டே தாங்கள் மோட்டார் சைக்கிலில் சென்ற மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் சந்தேக நபர்களான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இனங்காணப்பட்ட பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட தடயவியல் ஆய்வு பொலிஸார் அங்கு துப்பாக்கியின் தோட்டாவின் வெற்று கோது ஒன்றினை அங்கிருந்து மீட்டுள்ளனர்.