தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்று 10.09.2019 அன்று Phalsbourge மாநகர சபை முன்றலில் இருந்து ஆரம்பித்த மனித நேய மிதிவண்டிப்பயணம் தொடர் காவல்த்துறையின் கண்காணிப்பிலும் பாதுகாப்பிலுமாக Saverne மாநகரசபையினை வந்தடைந்தது , வழமை போலவே மனிதநேய ஈருருளிப் பயணாளர்களை வரவேற்று சுடுபானமும் கொடுத்து உற்சாகப்படுத்தினர்.
அதனோடு எமது கோரிக்கை அடங்கிய மனுவும் முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.
மிகமுக்கியமாக Républicaine Loraine எனும் ஊடகப் பத்திரிகையில் வெளிவந்த எமது நீதிக்கான மனிதநேய ஈருருளிப்பயணம் சார்ந்த செய்தி மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
https://www.republicain-lorrain.fr/edition-de-sarreguemines-bitche/2019/09/09/les-tamouls-veulent-que-justice-soit-faite
தொடர்ச்சியாக Starsbourg ல் அமைந்திருக்கும் ஐரோப்பிய ஆலோசனை சபையில் நடைபெற்ற முக்கிய அதிகாரிகளுடன் நடந்த சந்திப்பின் பின் 3.30 மணி அளவில் அங்கே நடைபெற்ற கவனயீர்ப்பு ஒன்றுகூடலுக்கு பின் Selestat மாநகரசபையில் இன்று 590Km கடந்து நிறைவு பெற்றது.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”