பா.ஜனதா வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பு

302 0

201610261156128049_3-constituency-election-bjp-candidates-announces-today_secvpfஅரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை அறிவிக்கப்படுகிறது.அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

3 தொகுதி தேர்தலில் பா.ஜனதா போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து இருந்தார்.

இந்த 3 தொகுதிகளிலும் போட்டியிட தகுதி வாய்ந்தவர்கள் பட்டியலை பா.ஜனதாவின் மாநில தேர்தல் பணிக்குழு ஆய்வு செய்தது. அவர்கள் 3 பேர் கொண்ட பெயர் பட்டியலை அகில இந்திய தேர்தல் பணிக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கட்சி மேலிடம் பரிசீலித்து இன்று மாலை வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறது. தஞ்சையில் எம்.எஸ்.ராமலிங்கம், திருப்பரங்குன்றத்தில் சீனிவாசன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.