சிறப்பு அந்தஸ்து கிடைக்காவிட்டால் ஒய்.எஸ்.ஆர். காங். எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள்

386 0

201610261234381431_ysr-mps-will-resign-if-special-status-is-not-achieved-says_secvpfஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தராவிட்டால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.ஒருங்கிணைந்த ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உதயமானதால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு அம்மாநில மக்கள் போராடி வருகிறார்கள்.

தேர்தல் பிரசாரத்தின்போது மாநில சிறப்பு அந்தஸ்து தரப்படும் என்று தெரிவித்த பா.ஜனதா தற்போது பின்வாங்கி விட்டது. ஆந்திராவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படும் என கூறியது.

ஆனால் இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்பிரச்சினை குறித்து அக்கட்சியின் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் பேசி வருகிறார்கள்.

மாநில சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி ஒவ்வொரு மாவட்டமாக சென்று பேசி வருகிறார். இதற்காக கர்னூலுக்கு சென்ற அவர் கல்லூரி மாணவ- மாணவிகள் மத்தியில் பேசியதாவது:-

தெலுங்கானா மாநிலத்துக்கு ஐதராபாத் சென்றுவிட்டதால் ஆந்திராவுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு தொழிற்சாலைகள், கம்பெனிகள் உள்ளன. இதனால் ஆந்திர மாநில மாணவர்கள் வேலைவாய்ப்பு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் வரி சலுகைகள் அறிவித்திருப்பதும் இதனால் தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் முன் வருவார்கள். இதன்மூலம் வேலை வாய்ப்புகள் பெருகும்.

தெலுங்கானா மாநிலத்துக்காக இவர்கள் போராடி பெற்றுவிட்டனர். அதுபோல் நாமும் சிறப்பு அந்தஸ்துக்காக போராட வேண்டும். இதற்கு நீங்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

பாராளுமன்ற குளிர்கால தொடர் கூட்டத்தில் சிறப்பு அந்தஸ்து பிரச்சினையை எழுப்புவோம். பட்ஜெட் கூட்டத் தொடரிலும் இப்பிரச்சினையை எழுப்பி குரல் கொடுப்போம்.

அதன் பின்னும் மாநில சிறப்பு அந்தஸ்து தராவிட்டால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள். அவர்கள் மீண்டும் போட்டியிடும்போது உங்கள் ஆதரவை தந்து எம்.பி. ஆக்கினால்தான் மக்களின் எண்ணத்தை மத்திய அரசுக்கு புரிய வைக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.