பிரிட்டன் இளவரசியை மேலாடை இல்லாமல் படம்பிடித்தவர்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு

339 0

201610261142552082_six-face-trial-in-france-over-topless-photos-of-british_secvpfபிரிட்டன் நாட்டின் இளவரசரான வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதியர் கடந்த 2012-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். தெற்கு லுபெரான் பகுதியில் அவர்கள் இருவரும் தனிமையில் இருந்தபோது இளவரசி கேத் மிடில்டன் மேலாடையின்றி மாடியில் உலவிய காட்சியை சிலர் ரகசியமாக மறைந்திருந்து படம் பிடித்தனர்.

அந்த புகைப்படங்கள் பிரான்ஸ் நாட்டின் பிரபல நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகைப்படங்கள் மேலும் பரவாத வகையில் இதற்கு காரணமானவர்கள்மீது சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இளவரசர் வில்லியம் அப்போது வலியுறுத்திருந்தார்.

இந்த சம்பவம் நடந்து நான்காண்டுகள் கடந்துவிட்ட நிலையில் கேத் மிடில்டன் மேலாடை இல்லாமல் தோன்றிய காட்சியை படம்பிடித்து பத்திரிகையில் வெளியிட்ட இரு புகைப்படக் கலைஞர்கள், வெளியிட்ட பத்திரிகையாளர்கள் என மொத்தம் ஆறுபேர்மீது தற்போது பாரிஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர பிரான்ஸ் அரசு தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி மாதம் தொடங்கும் என்றும், இவ்வழக்கை சந்திக்கும் ஆறுபேரில் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி-க்கு சொந்தமான பத்திரிகையின் ஆசிரியரும் ஒருவர் எனவும் தெரியவந்துள்ளது.