பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிற்கும்,அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு நாள இடம் பெறவுள்ளது. இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கியதேசிய கட்சிக்குள் நிலவும் சிக்கல் நிலைக்கு உரிய தீர்வு எட்டப்படும் என எதிர்பார்ப்பதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தலுக்கு தயார் என்பது மக்களுக்கு சேவையாற்ற தயார் என்பதே ஆகும்.தேர்தல் என்பது வியாபார நடவடிக்கை அல்ல .நாட்டை கட்டியெழுப்ப கூடிய தகுந்த வேட்பாளரை தெரிவு செய்தல்அவசியமானதாகும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சர்வாதிகார கட்சியாகும்.ஆகவே,எந்த வாய்ப்புக்களும் இன்றி அவர்களுடைய ஜனாதிபதி வேட்பாளரை இலகுவில் அறிவித்து விட்டார்கள்.
ஆனாலும் ஐக்கியதேசிய கட்சியில் அவ்வாறானதொரு நிலைமை இல்லை.வேட்பாளராக களம் இறங்குவதற்கான கோரிக்கையை யார் வேண்டுமாயினும் முன்வைக்கலாம் ஏனெனில் அதற்கான ஜனநாயக உரிமை கட்சிக்குள் பேணப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.