ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடர்பான அறிவிப்பு ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக இதுவரையில் மாத்திரம் 17பேர் அறிவித்துள்ளார்கள் என சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிஹால்புஞ்சிநிலமே தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் அதற்கு முன்னர் இடம் பெறவுள்ள எல்பிடிய பிரதேச சபை தேர்தல் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் உயர்மட்ட அதிகாரிகள் , பொலிஸ் தரப்பினருக்கிடையில் இதுவரையில் பேச்சுவார்த்தை நிறைவுப் பெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் அதிகாரம் நேற்று நள்ளிரவு முதல் தேர்தல் ஆணைக்குழுவிற்கு காணப்படுகின்றது.
இதற்கமைய இம்மாத இறுதியில் வேட்பு மனுத்தாக்கல் குறித்த அறிவிப்பு விடுக்கப்பட வேண்டும் என்ற நிலை காணப்படுகின்ற பட்சத்தில் எவ்வாறு இருப்பினும் அடுத்த மாதம் முதல் வாரத்திலே வேட்பு மனுத்தாக்கலுக்கான அறிவிப்பு விடுக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.
இரண்டு பிரதான கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு அவர்கள தரப்பில் விடுக்கப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 17 பேர் போட்டியிட உள்ளார்கள். இந்த அறிவிப்பு உத்தியோகப்பூர்வமாக கிடைக்கப் பெறவில்லை. என்றார்.