பொதுதுஜன பெரமுனவின் மொட்டுச்சின்னத்தை மாற்றுவதற்கு இடமில்லை : வாசுதேவ

308 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் பொதுதுஜன பெரமுனவின் மொட்டுச்சின்னத்தை மாற்றுவதற்கு இடமில்லை.

 

தனித்து போட்டியிட்டால் பாரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன இணைந்து கூட்டணியாக ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதற்கு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. என்றாலும் இறுதியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், கூட்டணி அமைத்து செல்வதாக இருந்தால் பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டுச்சின்னம் அல்லாமல் பொதுச்சின்னத்திலே போகவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி  தீர்மானித்திருக்கின்றது.