பகிடிவதை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள றுகுணு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் உட்பட 19 மாணவர்களினதும் விளக்கமறியலை நீடித்து மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அவர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள றுகுணு பல்கலைக்கழக மாணவர்களை இன்றைய தினம் மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குறித்த 19 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.