ராஜினாமா செய்த தலைமை நீதிபதியுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு

289 0

பதவியை ராஜினாமா செய்த தலைமை நீதிபதி தஹில் ரமானியை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசினார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்தது.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி தஹில்ரமானி தனது தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி உள்ளார். அதன் நகலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார். அவரது ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ராஜினாமா செய்த தலைமை நீதிபதி ரஹில்  ரமானியை சந்தித்து பேசினார். அப்போது ராஜினாமா முடிவை கைவிட வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ராஜினாமா செய்த தலைமை நீதிபதி ரஹில்  ரமானியை சந்தித்து பேசினார். அப்போது ராஜினாமா முடிவை கைவிட வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.