என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும்… பேரறிவாளன் தாயார் உருக்கமான டுவிட்

299 0

என் உயிர் இருக்கும்போதே 7 பேர் விடுதலை தொடர்பான கோப்பில் ஆளுநர் கையொப்பமிட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அற்புதம்மாள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், இந்த தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் அமைதி காத்து வருகிறார். பேரறிவாளன், நளினி தரப்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் ஓராண்டு காலமாக தீர்மானம் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஓராண்டு ஆவதை குறிக்கும் வகையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் டுவிட்டரில் தனது வேண்டுகோளை பதிவு செய்துள்ளார்.

“அமைச்சரவை  பரிந்துரைத்து 1ஆண்டு.
நிரபராதி,விடுதலை செய்யனும்னு சம்பந்தப்பட்ட பலர் ஒப்புக்கொண்டும் தாமதமேனோ?
நிரபராதிக்கு தீர்வு அரசியல்சட்டம்161என அறிவீரே!
29வருட அநீதியில் உங்கள் பங்கு ஒன்றுடன் முடியட்டும்;
என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும்!”
என அற்புதம்மாள் டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.