எழுக தமிழ் ஏற்பாடுகள் குறித்து வவுனியா சமூகமட்ட அமைப்புகளுடன் தமிழ் மக்கள் பேரவை ஆராய்வு!

398 0

தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்து வவுனியா மாவட்ட சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் தமிழ் மக்கள் பேரவை நேற்று நடாத்திய சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழுவினரால் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட சந்திப்பினைத் தொடர்ந்து வவுனியா மாவட்டத்திற்குட்பட்ட செயற்பட்டுவரும் சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற இச்சந்திப்பில் எழுக தமிழ்-2019 நிகழ்வு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டு வவுனியா மாவட்ட ஏற்பாட்டுக்குழு உருவாக்கப்பட்டு பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளின் வவுனியா மாவட்டத் தரப்பினர் ஏற்பாடு செய்திருந்த இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த சுமார் 20 இற்கு மேற்பட்ட சமூக மட்ட அமைப்புகள் எழுக தமிழ்-2019 இற்கான பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு
எழுக தமிழ்-2019
தமிழ் மக்கள் பேரவை
08/09/2019