ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் பலம் இருப்பதாகவும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாவிடின் ஜனாதிபதியின் இறக்கை உடைந்துவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனால் ஒரே நேரத்தில் ஜனாதிபதி பதவியையும் பாராளுமன்றத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஒரு அடிகூட பின்னோக்கிய காலடி எடுத்து வைப்பது இல்லை எனவும் அதனை தெளிவாக காட்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளகப் பிரச்சினைகள் தொடர்பில் கவலைப்படத் தேவையில்லை எனவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தலைவர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெற்றிகரமான முறையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு வருவதாகவும் தாங்கள் கைவைத்த எதுவும் தோல்வியில் முடிந்தது இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.