கிளிநொச்சியில் திடீரென குவிந்த பொலிஸ் மற்றும் அதிரடிப்படையினர்

349 0

killinoshi-640x381யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதி மற்றும் அறிவியல் நகர் பகுதியில் அதிகளவு பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தமையால் அங்கு பதற்ற நிலை உருவாகி இருந்தது.

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெற்று வந்த நிலையில், அந்த தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப் போவதாக தகவல் ஒன்று பரவியதை அடுத்து கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதிதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, திடீர் என பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தமையால் அங்கு பதற்ற நிலைமை உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.