சாலாவ வெடிவிபத்து – நட்டஈடு இதுவரையில் இல்லை

315 0

indexகொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டு இதுவரை 5 மாதங்கள் கடந்துள்ளன.

எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈடு இதுவரையில் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்களுக்கான மக்கள் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதற்கு எதிராக இன்று இரவு கறுப்பு கொடியை பறக்கவிட்டு, எதிர்ப்பினை வெளியிடவுள்ளதாக அந்த ஒன்றியத்தின் செயலாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.