தலகிரியாகம விபத்தில் ஒருவர் பலி

239 0

அம்பேபுஸ்ஸ – திருக்கோணமலை வீதியின் தலகிரியாகம பிரதேசத்தில் இடம்பெறற் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் மற்றும் ஜீப் வாகனம் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கலேவெல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 55 வயதுடைய நபர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் ஜீப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.