கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் நிலவும் வாகன நெறிசலை தவிர்க்க பொலிஸார் ஆலோசனை!

374 0

கொழும்பு நகரிலும் , நகரை அண்டியப் பகுதிகளிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏற்படும் வாகன நெரிசல்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து பொலிஸ் திணைக்களமும் , போக்குவரத்து அமைச்சும் கவனம் செலுத்தி வருகின்றது.

குறிப்பாக காலை வேளையில் ஏற்படும் வாகன நெரிசலின் காரணமாக பாடசாலைக்குச் செல்லூம் மாணவர்களும் அலுவலக ஊழியர்களும் உரிய நேரத்தில் சமூகமளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மாலை வேளையில் கடமையை முடித்து விட்டு வீடு செல்லும் ஊழியர்கள் வாகன நெரிசல் காரணமாக பல மணித்தியால தாமதத்தின் பின்னரே வீடுகளுக்கு செல்ல முடிவதாக சுட்டிக்காட்ட படுகின்றது. இது குறித்த பெரும் எண்ணிக்கையிலான முறைப்பாடுகளும் ஆலோசனைகளும் பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்து வருகின்றன.

பெரும்பாலும் கொள்கலன்கள் காலை மாலை வேளைகலில் அதிகளவில் பயணிப்பதால் பெரும் வாகன நெரிசல் ஏற்படுவதாக , அந்த பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்துள்ள ஆலோசனைகளிலும் முறைப்பாடுகளிலும் தெரியவந்துள்ளது.

1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாலை 6 மணிமுதல் காலை 6 மணி வரையே கொள்கலன்கள் பயணிக்க முடியும் என்ற கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

தற்போது 40 அடி மற்றும் 20 அடி நீளமன கொள்கலன்கள் காலையிலும் மாலையிலும் அதிகமாக பயணிப்பதால் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.

இந்த வாகன நெரிசலை கட்டுப்படுத்த காலை 6.30 மணிமுதல்  8.30 மணி வரையும் , மாலை 4.30 மணிமுதல் 8 மணிவரையும் கொள்கலன்கள் பயணிப்பதை தடைசெய்ய வேண்டும் என பொலிஸ் தலைமையகத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள ஆலோசனைகளில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக பொலிஸ் தலைமையக உயர் அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்டப்போது , இவ்வாறான மாற்றங்கள் அரச மட்டத்திலேயே எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.