பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ரணில் சவால் அல்ல : வாசுதேவ

246 0

ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  அனைத்து தரப்பினரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தையினை முன்னெடுப்போம்.

 

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் அல்ல எவர்  களமிறங்கினாலும் தேர்தல் பெறுபேறு  படுதோல்வியாகவே அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

உத்தேச ஜனாதிபதி தேர்தலில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  வெற்றிக்கு நாடுதழுவிய ரீதியில் தேர்தல் பிரச்சாரங்களை   ஒன்றினைந்து  மேற்கொள்ள  தீர்மானித்துள்ளோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  தமிழ் மக்களை ஒன்றுத்திரட்டி அரசாங்கத்திற்கு குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக  பேரணி ஒன்றினையும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடப்பு அரசாங்கம், ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதார கொள்கை இவ்விரு விடயங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பினருடன்  பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பலமாக அரசாங்கத்தை உருவாக்குவதே பிரதான எதிர்பார்ப்பாகவும் காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.