இன்று ஏ-9 வீதியில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், பாரஊர்தியில் வந்த பத்து மர்ம நபர்கள், அரசினர் பேருந்தை வழிமறித்து அதற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
பேருந்துள் நுழைந்த குறித்த மர்ம நபர்கள் பேருந்து நடத்துநரிடமிருந்து பணத்தினையும் ரிக்கற் புத்தகத்தையும் பறித்துச் சென்றதுடன் பேருந்தையும் தாக்கியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து, வவுனியா நோக்கி புறப்பட்ட பேருந்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து பயணிகள் தெரிவிக்கையில் பேருந்தைச் சேதப்படுத்தியவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இன்று கர்த்தால் தினமாகையால் யாழ்ப்பாண நகரமெங்கும் காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.