கிளிநொச்சியில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் கடுமையான மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதேவேளை கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் டிப்போ சந்திக்கும் இடையே ரயர்களைக் கொளுத்தி பொது மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவுவதுடன் அதிகளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.