அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனையான செரீனாவை எதிர்த்து கனடாவின் இளம் வீராங்கனை பியாங்கா விளையாட உள்ளார்.கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் பியான்கா 7-6 (7-3), 7-5 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், 5ம் தரநிலை வீராங்கனை எலினா சுவிட்டோலினாவை 6-3, 6-1 என்ற செட்கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் அமெரிக்க ஒபனில் 10வதுமுறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறார் செரீனா.