வடக்கு மாகாணம் முழுவதும் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று கிளிநொச்சி நகரிலும் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.
இதற்கமைய கிளிநொச்சியில் இன்று வர்த்தக நிலையங்கள், வங்கிகள், சந்தைகள், பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்கள் உட்பட பல்வேறு பிரிவுகளும் இயக்கமின்றிக் காணப்பட்டன. இதனால் கிளிநொச்சி நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.