ஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பு- இருதரப்பு உறவுகளை மேம்படுத்த பேச்சுவார்த்தை

390 0

ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்து பேசினார்.இந்திய பிரதமர் மோடி ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியா-ரஷ்யா இடையேயான 20வது உச்சி மாநாட்டில் மோடி பங்கேங்றார்.

ரஷ்ய அதிபர் புதினையும் சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்த ஒத்துழைப்பு குறித்து பேசினார். பின்னர் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிலையில், விளாடிவோஸ்டோக் நகரில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை மோடி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பொருளாதாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இரு தலைவர்களும் உறுதி அளித்தனர்.

ஜப்பானின் ஒசாகாவில் நடந்த ஜி20 மாநாட்டின்போது மோடியும் அபேயும் சந்தித்த பிறகு, இப்போது மீண்டும் சந்தித்துள்ளனர்.
மலேசிய பிரதமருடன் மோடி சந்திப்பு

இந்த சந்திப்பைத் தொடர்ந்து மலேசிய பிரதமர் மகாதீர் பின் முகமது, மங்கோலிய ஜனாதிபதி கால்ட்மாகின் பட்டுல்கா ஆகியோரையும் மோடி சந்தித்து பேசினார்.