தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு கணினி அறையில் சட்டமன்ற தொகுதி தேர்தலில் பணிபுரியும் ஓட்டுச்சாவடி அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி நடந்தது.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு கணினி அறையில் சட்டமன்ற தொகுதி தேர்தலில் பணிபுரியும் ஓட்டுச்சாவடி அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி நடந்தது. இது குறித்து கலெக்டர் அண்ணாதுரை கூறியதாவது:-
தஞ்சை சட்டசபை தொகுதிக்கு வரும் 19-ந் தேதி ஓட்டு பதிவு நடக்க உள்ளதை யொட்டி தேர்தலில் பணிபுரியும் ஓட்டுச்சாவடி அலுவலர்களை கணினியில் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. சட்டசபை தொகுதிக்கு ஆயிரத்து 400 பணியாளர்கள் தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தபடவுள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் 27-ந் தேதி காலை, பிற்பகல் என்று 2 பிரிவுகளாக நடக்கிறது. காலை ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் முதல் ஓட்டு பதிவு அலுவலர் ஆகியோர்களுக்கான பயிற்சி நடக்கிறது. பிற்பகல் ஓட்டுபதிவு அலுவலர் 2 மற்றும் 3 நிலையில் உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.