ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 5 உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

367 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 5 தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டமையாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன, எஸ்.பி.திஸாநாயக்க, விஜித் விஜயமுனி சொய்சா, டிலான் பெரேரா மற்றும் ஏ.எச்.எம் பௌசி ஆகியவர்களுக்கு எதிராகவே ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதற்கான கடிதங்கள் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0Shares