அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதமொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாளைமறுதினம் கையளிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.
அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக மக்களை அணித் திரட்டும் மக்கள் பேரணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. மூன்றாவது மக்கள் பேரணி நாளை குருணாகலையில் இடம்பெறவிருக்கிறது.
இந்நிலையில் நாளை மறுதினம் சஜித்தை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு கோரிக்கை கடிதமொன்றை பிரதமரிடம் கையளிக்கவுள்ளோம்.
தற்போதையளவில் 50 க்கு அதிகமான உறுப்பினர்கள் அந்த கோரிக்கை கடிதத்தில் கைசாத்திட்டுள்ளனர். எவ்வாறாயினும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிடுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.