பிரான்சில் நீதிகோரிய நடைபயணம் 7வது நாளில் துறோவா மாநகரத்தை நோக்கி…!

543 0

தமிழின அழிப்புக்கான நீதி வேண்டி கடந்த 28.9.2019 பாரிசில் இருந்து ஆரம்பித்த நடைபயணம் க saint Benoist sur vanne,என்னும் இடத்தில் இருந்து இன்று காலை 8.30 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. 60 இலக்கப்பாதையின் ஊடாக 34 கிலோ மீற்றர் தூரத்தில் தமிழ்மக்கள் வாழும் துறோவா மாநகரத்தை நோக்கி செல்கின்றது.

நேற்று நடைபயணத்தின் போது ஜேர்மன் நாட்டைச்சேர்ந்த படப்பிடிப்பாளர் செயற்பாட்டாளர்களை அணுகி இதனை படப்பிடிப்பு செய்யக்கேட்டிருந்தார். நடைபயணத்தை பறக்கும் படக்கருவிமூலம் படம் பிடித்ததோடு அதனை பாரிசிலிருந்து ஜெனீவா நோக்கிய பயணம் என்னும் தலைப்பில் போடுவதாகவும் தமது தொடர்புகளையும் கொடுத்திருந்தார்.

இதேவேளை இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பலியான இளம் வீரர்களுக்கான நினைவுத்தூபியின் முன்பாகவும் நடைபயண வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.