2020 ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தை சுதந்திர கட்சியே பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது – தயாசிறி

293 0

உத்தேச ஜனாதிபதி தேர்தலில்   சுதந்திர கட்சியை தவிர்த்து எக்கட்சியும் 47  சதவீத  வாக்குகளை பெறாது. 2020ம் ஆண்டு  ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முறையான செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இனி அவை  மக்கள் மத்தியில் செயற்படுத்தப்படும். என   ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 68வது தேசிய மாநாடு  இன்று  சுஹததாஸ உள்ளக அரங்கில் கட்சியின் தலைவர்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இனவாதிகளுக்கும்,  சர்வாதிகாரத்திற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்கவில்லை.  ஜனநாயகத்தை மையப்படுத்தியே  இதுவரையில்  ஆட்சியதிகாரத்தை பெற்றுள்ளது.   ஜனநாயகத்திற்கு  மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே  கட்சியின் தலைவர்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தேசிய அரசாங்கத்திலிருந்து  வெளியேறினார்.

உத்தேச  ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியை தவிர்த்து எக்கட்சிகளுக்கும்  47 சதவீத வாக்குகளை  பெற முடியாது. 2020ம் ஆண்டு ஆட்சியை சுதந்திர கட்சியே பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.   நாடு தழுவிய ரீதியில் சுதந்திர கட்சியின்  மக்கள் பேரணி இனி இடம்பெறும்  என்றார்.