14.4 கிலோகிரேம் நிறையுடைய தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் யாழ்ப்பாணம் பகுதியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரும், பொலிஸ் விசேட பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 38 வயதுடைய காங்கேசன்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
கைதுசெய்யப்பட்ட நபர் வலைகளுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.