கிளிநொச்சியில் கடும் வறட்சி

320 0

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசத்திற்குட்பட்ட கெங்காதரன் குடியிருப்பு பகுதியில் நிலவும் கடும் வறட்சியினால் குடிநீர் பெற்றுக்கொள்வதில் அப்பகுதி மக்கள் பெரும் சிரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசத்திற்குட்பட்ட அக்கராயன் கெங்காதரன் குடியிருப்பு பகுதியில் தற்போது நிலவும் கடுமையான வறட்சி காரணமாக தமக்கான குடிநீர் முதற்கொண்டு ஏனைய தேவைகளுக்கான தண்ணீரைப் பெற்றுக்கொள்வதில் சொல்லனத் துன்பங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

அதாவது குறித்த கிராமத்தில் வாழும் சுமார் 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு தண்ணீர் பிரச்சனையை வருடாந்தம் நிலவும் வறட்சி காரணமாக எதிர்கொள்வதாகவும் இந்தப் பிரதேசத்தின் குடிநீர் தேவையை பூர்ததி செய்யும் பொருட்டு கரைச்சிப்பிரதேச சபையினால் ஏற்படுத்தப்பட்ட குழாய்மூலமான குடிநீர் விநியோக திட்டம் செயலிழ்நதுள்ளதாகவும் இதனை விட ஏற்கனவே ஏற்படுடுத்தப்பட்ட குடிநீர் தி;ட்டம் ஒன்றும் இவ்வாறு செயலிழந்துள்ளது என்றும் குறிப்பிட்ட பிரதேச மக்கள்,

தமக்கான குடிநீர் கரைச்சிப்பிரதேச சபையினால் பவுசர் மூலம் வழங்கப்பட்டாலும் ஏனைய தேவைகளுக்கான தண்ணீர் பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்படுவதாகவும் தமது வாழ்வாதாரப்;பயிர்களான தென்னை, வாழை என்பன வறட்சியினால் அழிவடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ள மக்கள் குழிப்பதற்கு சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் குளத்திற்கு கால்நடையாக செல்ல வேண்டும்;

என்றும் வறட்சி காரணமாக குளத்தின் நீர்மட்டமும் குறைவடைந்து செல்வதாகவும் இதனால் தோல் தொடர்பான நோய்கள் ஏற்படும் ஆபாய நிலை காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.