சுதந்திரக் கட்சியின் கடந்த கால தீர்மானங்கள் தவறானவை-நிமல்

247 0

தற்­போது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தீர்­மா­மானங்கள் எதிர்­பார்ப்பு மிக்­க­வை­யாக இருக்­கின்­றன. ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து ஆட்­சி­ய­மைப்பது போன்று கடந்த காலங்­களில் நாம் எடுத்த தவ­றான தீர்­மா­னங்­களால் தான் அண்­மையில் பல சிக்­கல்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க நேர்ந்­தது. எனவே இனி எடுக்கும் தீர்­மா­னங்கள் அவ்­வா­றல்­லாமல் தீர்க்­க­மா­ன­வை­யாக  இருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் நிமல் சிறி­பால டி சில்வா தெரிவித்தார்.

சுதந்­திர கட்­சிக்கு ஆட்­சி­ய­மைக்கக் கூடிய அதி­காரம் இல்­லா­விட்­டாலும் ஆட்­சி­யா­ளரைத் தெரிவு செய்யக் கூடிய பலம் இருக்­கி­றது. அத்­தோடு ஜனா­தி­பதி தேர்தல் காலம் நெருங்கிக் கொண்­டி­ருக்­கின்­ற­மையால் எமது முடிவு எதிர்­பார்ப்­பா­ன­தா­கவும் மிகுந்த முக்­கி­யத்­து­வ­மு­டை­ய­தா­கவும் அமைந்­துள்­ளது. ஒரு­போதும் ஆட்­சியைக் கைப்­பற்ற முடி­யாது என்று தெரிந்தும் ஜே.வி.பி தனித்து போட்­டி­யிடத் தீர்­மா­னித்­தது. இந்­நி­லையில் நாமும் தீர்க்­க­மா­ன­தொரு முடிவை எடுக்கவேண்­டிய இடத்தில் இருக்­கின்றோம்.