வாரிசு அரசியலால் இ.தொ.காவில் பிளவு?

269 0

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணித் தலைவராக, அக்கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் நியமிக்கப்பட்டமையால் அக்கட்சியில் உள்ள பலரும் அதிருப்தியில் இருப்பதாக அறிய முடிகிறது.

குறிப்பாக அக்கட்சியின் இளைஞரணித் தலைவராக கொட்டக்கலை பிரதேசசபையின் தலைவர் ராஜமணி பிரசாத் நியமிக்கப்படுவாரென அக்கட்சியின் இளைஞர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஜீவன் தொண்டமான் நியமனம் ஏமாற்றத்தையளித்திருப்பதாகவும் தெரியவருகிறது.

இ.தொ.காவின் தேசிய சபையிலேயே ஜீவன் தொண்டமானை அக்கட்சியின் இளைஞரணித் தலைவராக தெரிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இத்தெரிவின்போது வாக்கெடுப்பு எவையும் நடத்தப்படவில்லை என்றும் தெரியவருகிறது.

இதேவேளை இ.தொ.காவின் உயர் பதவிகளில் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களுக்கு நியமனம் வழங்கப்படுவதால், குடும்ப அரசியலால் அதிருப்தியில் இருக்கும் இளைஞரணி ஒன்று இ.தொ.கவிலிருந்து வெளியேறி சுயாதீனமாக இயங்கவும் தயாராகி வருவதாகவும் நம்பகமானத் தகவல்கள் தெரிவிக்கின்றன.