ராஜபக்ஷக்கள் ஒன்றிணைந்து இராணுவப் புரட்சிக்கு சூழ்ச்சித் திட்டமொன்றை வகுப்பதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த இணையத் தளத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இலங்கை இராணுவம் தொடர்பில் ராஜபக்ஷகள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மஹிந்த ஆட்சியின் போது இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் இப்போது பெரிதாக இல்லை என மஹிந்த தரப்பு அணியினர் முன் வைக்கும் கருத்துக்கள் இராணுவம் மத்தியில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன, இலஞ்ச ஊழல் எதிப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் தில்ருக்சி டயஸ் தொடர்பில் வெளியிட்ட கருத்துகளுக்கு மறுப்பு வெளியிட்ட மஹிந்த, இராணுவ புரட்சி தொடர்பில் வெளியான செய்திகள் தொடர்பில் எந்த கருத்துக்களையும் வெளியிடாமல் இருப்பது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, குறித்த இராணுவ புரட்சிக்கு ராஜபக்ஷக்களின் பின்னணி இருக்கும் என நம்பப்படுகின்றது.
அதேவேளை, காவல்துறையினரையும் திசை திருப்ப வட புலத்தில் யாழ்.பல்கலைகழக மாணவர்களின் மீதான காவல்துறையினரின் தாக்குதலையடுத்து உருவான அசாதாரண சூழ்நிலையை வைத்து ராஜபக்ஷக்கள் காவல்துறையினரையும் தம் பக்கம் மாற்றிக் கொள்ள முயற்சிப்பது வெளிப்படையாக உள்ளது.
குறிப்பாக மஹிந்த நேற்றைய தினம் விகாரை ஒன்றில் வைத்து இது தொடர்பில் நல்லாட்சி என்ற பெயரில் காவல்துறையினருக்கு தண்டனை வழங்க வேண்டாம். காவல்துறையினரின் கடமையைத்தான் செய்து இருக்கின்றார்கள் என்ற விதத்தில் கருத்தை வெளியிட்டிருந்தார்.
இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது முடக்கப்பட்டுள்ள ராஜபக்ஷக்கள் மீண்டும் தலை தூக்குவதற்காக இராணுவத்தை பயன்படுத்தி இராணுவ புரட்சி ஒன்றின் மூலம் நாட்டை கைப்பற்ற வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.