துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவன் கைது

228 0

ரி56 ரக துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கி வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான சிறைச்சாலை பொறுப்பாளரை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது, 12 தோட்டாக்களுடன் கூடிய மெகசின் ஒன்றும் மற்றும் குறித்த குற்றச்செயலுக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் தும்கொல நிவாச, பன்னில பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.