தமிழினப்படுகொலை க்கு நீதி கோரி பாரிசிலிருந்து ஆரம்பித்த நடைபயணப் போராட்டம் 6ம் நாளாக சொன்ஸ் பிரதேசத்திலிருந்து இன்று காலை மாநகரசபை முன்பாக அகவணக்கத்துடன் ஆரம்பமானது. இப் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதற்காக தமது இரண்டு மகன்மார்களை 32கிலோமீட்டர் மீற்றர் வரை நடைபயணத்திற்கு தாமாகவே முன் வந்து இணைத்தமை மேலும் உற்சாகத்தை எமக்கு ஏற்படுத்தியிருந்தது.
நடைபயணம் செல்லும் பாதையில் foissy sur vanner என்னும் மாநகரத்தில் 2 ஆம் உலகமகா யுத்தத்தில் பிரான்சு நாட்டை மீட்பதற்க்காக தம் இன்னுயிரை தாய்நாட்டற்காக ஈந்ந இளைய வீரர்களுக்காக எழுப்பப்பட்டுள்ள நினைவுக்கல். நாமும் இன்று எமது இதய வீரவணக்கத்தை தெரிவித்திருந்தோம்.