எதிர்வரும் அரசியல் மாற்றத்தில் ஆரம்ப பாடசாலை கல்விக்காக தான் தனிப்பட்ட முறையில் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
களுத்துறை புளத்சிங்கள பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு உதா கம்மான வீட்டுத்திட்டங்களை பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
இதில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், ஜனாதிபதி தேர்தலில் ஆரம்ப பாடசாலை கல்வி சிறந்த மதிப்பை பெறுகிறது. ஆரம்ப பாடசாலை கல்வியை வேட்பாளர்கள் நேசிக்கின்றனர். கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களில் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களை வாசித்து பாருங்கள். ஆரம்ப பாடசாலை கல்விக்கு தனியாக அத்தியாயம் ஒன்றை அளித்து, வாக்குறுதிகளை வழங்குகின்றனர். வெற்றி பெற்ற பின்னர் அனைத்தும் மறக்கப்படுகின்றன.
ஆரம்ப பாடசாலை கல்வி தொடர்பில் எவருக்கும் இல்லாத அக்கறை எனக்கு இருக்கின்றது. ஆரம்ப பாடசாலைகளுக்கு பணம் அறவிடப் படக்கூடாது. என்னிடம் இருக்கிறது வேலைத்திட்டம் ஒன்று. பெற்றோரிடம் பணம் பெறாத கல்வி முறை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும்.
உறுதியான வாக்குறுதியை வழங்குகிறேன், எதிர்வரும் அரசியல் மாற்றத்தில் ஆரம்ப பாடசாலை கல்விக்காக தனிப்பட்ட முறையில் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.