கல்வியை நவீனமயப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். பொருளாதாரத்தை நவீனமயப்படுத்தி அதனை மேம்படுத்துவதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.கல்வியை நவீனமயப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். பொருளாதாரத்தை நவீனமயப்படுத்தி அதனை மேம்படுத்துவதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொரிய அரசாங்கத்தின் நிதியுதவியில் குளியாபிட்டியில் அமைக்கப்பட்டுள்ள தொழிநுட்ப கல்லூரியில் ஆரம்ப நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
வடமேல் மாகாண பல்கலை கழகத்திலும், அடுத்த கட்டமாக மொரட்டுவை பல்கலை கழகத்திலும் வைத்தியபீடங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்காலத்தில் பொறியியல் பீடம் என்பவற்றையும் ஆரம்பித்து இலங்கையில் தொழிற்துறையை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.
அத்தோடு இம்மாதம் முதல் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு டெப் கணனிகளும் வழங்கப்படவுள்ளன. சகல தேசிய பாடசாலைகளுக்கும் இவை வழங்க்கப்படும். அதே போன்று எதிர்காலத்தில் மாகாண பாடசாலைகளுக்கும் டெப் கனணிகளை வழங்க தீர்மானித்துள்ளோம். இவ்வாறு கல்வியை நவீனமயப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை இலகுவாக மேம்படுத்தலாம்.
ஆரம்ப காலங்களில் சாதாரணதரம் வரை கல்வி கற்ற மாணவர்கள் தொழிற்சாலைகளில் தொழில் புரிந்தார்கள். பயிற்சி பெறாத தொழிகளாக இவர்கள் தொழிலில் ஈடுபட்டனர். ஆனால் இன்னும் எம்மால் அவ்வாறு குறைந்த வருமானத்திற்கு தொழில் புரிபவர்களாக இருக்க முடியாது. எனவே பொருளாதாரத்தை முறையாக மேம்படுத்துவதன் மூலம் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். இதுவே எமது எதிர்பார்ப்பாகும் என்றும் பிரதமர் கூறினார்.