“போலியான வாக்குறுதிகளினால் ஏமாற்றமடைந்த மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்”

327 0

அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளினால் ஏமாற்றமடைந்த மக்கள் இன்று  ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துள்ளார்கள். 3 0வருட கால சிவில் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவேன் என்று  மக்களுக்கு வழங்கிய  வாக்குறுதியை நிறைவேற்றியே  இரண்டாவது முறையும் அதிகாரத்தை பெற்றேன். போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றவில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

குடும்ப வறுமையின் காரணமாக  பெண்களே அதிகம் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்கள். இந்த கொடுமை யுத்த காலத்தில் கூட இடம் பெறவில்லை  இரண்டு பிரதான கட்சிகளுக்கும் சவால் விடுக்கும் விதமான பொதுஜன பெரமுன அடிமட்டத்தில் இருந்து எழுச்சிப் பெற்றுள்ளது. ஆகவே   சிறந்த அரசாங்கத்தை தோற்றுவிக்க  அனைத்து பெண்களும் ஒன்றுப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள கண்காட்சி அரசங்கில் இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின்  மகளிர் தேசிய மாநாட்டில்  கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.