யுத்தத்தில் காணாமல் போனோரது உறவுகளை ஏமாற்றும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுப்பதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, காணாமல்போனோர் அலுவலகத்தில் செயற்பாடுகளின் மீது மக்களுக்கு எவ்வித நம்பிக்கையும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நிச்சயம் ஆட்சி மாற்றம் இடம் பெறும். பாதிக்கப்பட்ட மக்களை ஒருபோதும் போலியான வாக்குறுதிகளினால் ஏமாற்ற மாட்டோம். உண்மைகள் எடுத்துரைக்கப்படும். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் உறுதியாக செயற்படுத்தப்படும் என்றார்.