அரசியல் யாப்பு மாற்றம் குறித்து கடந்த நான்கரை வருடங்கள் கழிந்ததன் பின்னர் கருத்துத் தெரிவிப்பது நகைச்சுவையாகவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
நாட்டுக்குப் பொறுத்தமான அரசியல் யாப்பொன்றை இப்போதாவது கொண்டுவர வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்த கருத்துக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஜனாதிபதி நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்கக் கூடாது. புதிய அரசாங்கமொன்று அமைக்கப்படும் போதுதான் புதிய அரசியல் யாப்பு மாற்றம் குறித்து பேசப்படுவது அரசியல் வழமையாகும். இதுவரையில் எமது நாட்டின் வரலாற்றில் அரசாங்கத்தின் இறுதிக் காலத்தில் அரசியல் யாப்பு மாற்றம் குறித்து பேசப்பட்டது இல்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.