பூலித்தேவன் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், நாளை நெல்லை பயணம்

338 0

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவலுக்கு செல்கிறார். அங்கு அமைந்துள்ள பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

மன்னர் பூலித்தேவன் 304-வது பிறந்தநாள் (1-ந்தேதி) நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவலுக்கு செல்கிறார். அங்கு அமைந்துள்ள பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தி.மு.க. நிர்வாகிகளும் உடன் செல்கின்றனர்.