வென்னப்புவ பிரதேச சபையின் உறுப்பினர் துலக்ஷி ஜமோதரி பிரனாந்து மற்றும் அவரது சகோதரிகள் இருவருக்குமான விளக்கமறியலில் எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் இன்று மாரவில நீதீவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்து பணியில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாரின் செயற்பாட்டிற்கு இடையூறு செய்ததாக குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட வென்னப்புவ பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரும் அவரது சகோதரிகளையும் கடந்த 21 ஆம் திகதி மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிவான் சந்தேக இன்று வரை விளக்கமறியலில் வைக்கு மாறு உத்தரவிட்டிருந்தார்.
இதன்போது வென்னப்புவ சிரிகம்பல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய துலக்ஷி ஜமோதரி பெர்ணான்டோ எனப்படும் வென்னப்புவ பிரதேசசபை உறுப்பினரும் , அவரது சகோரதரிகள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
அதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இவர்களின் தந்தையான சமன் அஷோக் குமார் பெர்னாண்டோ 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்வதற்கும் அனுமதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.