யுத்தம் எவ்வித முன்னறிவிப்புக்களுடனும் வராது!

393 0

நான்காம் கட்ட ஈழப்போரின் வெற்றிக்கு அரசியல் இராஜதந்திர மற்றும் இராணுவ நடவடிக்கைகளே காரணமாக அமைந்தது. எதிர்காலம் என்பது எப்போதும் முன்கூட்டியே தீர்மானிக்க முடியாததொன்றாகும் என்பதுடன் மற்றுமொரு யுத்தம் எவ்வித முன்னறிவிப்புக்களுடனும் வராது என்றுஇந்தியாவைச் சேர்ந்த பாதுகாப்பு விவகார ஆய்வாளரும், ஊடக செயற்பாட்டாளருமான நிதின் கோகலே தெரிவித்தார்.

நவீன யுத்தங்களைப் பொறுத்தமட்டில் அவற்றுக்கு தொடக்கம் என்றோ அல்லது முடிவு என்றோ ஏதுமில்லை. தற்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மோதல்கள் மற்றும் முரண்நிலைகளின் தன்மையும் மாற்றமடைந்திருக்கிறது.

எதிர்காலம் என்பது எப்போதும் முன்கூட்டியே தீர்மானிக்க முடியாததொன்றாகும்.

ஆகவே மற்றுமொரு யுத்தம் எவ்வித முன்னறிவிப்புக்களுடன் வராது என்பதுடன் அது காலத்தைப் பொறுத்ததொன்றாகவே அமையும் என அவர் இதன்போது தெரிவித்தார்.