பிரான்சில் இரண்டாவது நாளாகத் தொடரும் மனிதநேய நடை பயணப் போராட்டம்!

817 0

ரான்சு பாரிசிலிருந்து 2ஆம் நாள் நீதிக்கான நடை பயணம் நேற்று நிறைவுபெற்ற இடமான Choisy-le-Roi என்னும் மாநகரத்திலிருந்து இன்று காலை 8.30 அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

தமது கோரிக்கை அடங்கிய மனுவை மனித நேய நடை பயணத்தினர் நேரடியாக நகரபிதாவிடம் கையளிக்க இருந்ததும் இறுதிநேரத்தில் நகரபிதா விடுமுறையில் சென்றமையால் அதனை சங்கத்தினரிடம் கையளிக்கும் படி அவரால் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தமையால் அவரிடம் கையளித்து நடைபயணத்தை மற்றொரு நகரமான Evry-Courcouronnes பிரதேசத்தை நோக்கி பயணித்த நிலையில்,
செல்லும் வழியில் villeneuve le roi மாநகர சபையில் மனு கையளிக்கப்பட்டது. நடைபயணம் பின்னர் மதியம் Evry-Courcouronnes சென்றடைந்தது.

உணர்வாளர் இளையவர்கள் மனித நேய செயற்பாட்டாளர்களை வரவேற்றனர். அவர்களுடன் Evry-Courcouronnes நகரபிதாவிற்கான மனுவும் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து உடனடியாகவே நடைபயணம் அடுத்த மாநகரமான Melun நகரைநோக்கி புறப்பட்டு இன்று இரவு அங்கு சென்றடையவுள்ள அதேநேரம். நாளை 30.08.2019 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு Melun நகரில் இருந்து நடை பயணம் புறப்படவுள்ளது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-ஊடகப்பிரிவு)