குப்பை லொறிகள் மீது தொடர்ந்து தாக்குதல்

356 0

புத்தளம்  அருவக்காடு குப்பை சேர்க்கும் இடத்திற்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற லொறிகள் மீது தொடர்ந்தும் கல் வீச்சு மேற்கொண்டுள்ளனர். பொலிஸார் பாதுகாப்புக்காக இணைக்கப்பட்டுள்ள போதும் தாக்குதல்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாணத்துவில் பகுதியில் கொழும்பிலிருந்து அருவக்காடுக்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது இன்று அதிகாலை 1 மணியளவில் கல் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.இதன்போது கல்தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் பொலிஸார் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன் னெடுத்து வருகின்றனர்.