பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட ஷாகோட் நகரில் எய்ட்ஸ் எனப்படும் கொடிய நோய் வேகமாகப் பரவி வருகிறது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட ஷாகோட் நகரில் எய்ட்ஸ் எனப்படும் கொடிய நோய் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த ஒரு ஆண்டு காலத்தில் மட்டும் எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறித்து சட்ட அமலாக்கத்துறை பஞ்சாப் மாகாண அரசிடம் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அந்த தகவல்களின் படி இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 85 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
முன்னதாக கடந்த மே மாதம் சிந்து மாகாணத்தில் 600-க்கும் மேற்பட்டோர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதும், அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐ.நா.வின் புள்ளிவிவரங்களின் படி ஆசியாவிலேயே எய்ட்ஸ் நோய் வேகமாக பரவும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 2 இடத்தில் இருப்பதும், கடந்த 2017-ல் மட்டும் அங்கு சுமார் 20 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.