ரவியை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு

334 0

அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை இன்றிலிருந்து எதிர்வரும் 14 நாட்களுக்குள் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மத்­திய வங்கி பிணைமுறி மோசடி விவ­கா­ரத்தில் விசா­ர­ணை­க­ளுக்­காக ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி  விசா­ரணை ஆணைக்­குழு முன்­னி­லையில், தவறான ஆதாரங்களை வழங்கியமை தொடர்பிலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குவதற்காகவே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.